சுரைக்காய் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சுரைக்காய் - 1/2 கிலோ
2. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
3. இஞ்சி - சிறிது
4. கறிவேப்பிலை - சிறிது
5. தேங்காய்த் துருவல் - 100 கிராம்
6. தயிர் - 1 கப்
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - 1 தேக்கரண்டி
9. கடுகு - சிறிது
10. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. இஞ்சியைத் தோல் சீவி வைக்கவும்.
2. சுரைக்காயைத் தோல் நீக்கிச் சிறு துண்டுகளாக நறுக்கி, பச்சை மிளகாய், இஞ்சி, உப்பு, தண்ணீர் சேர்த்து வேக விடவும்.
3. தேங்காயை அரைத்துத் தயிருடன் சேர்க்கவும்.
4. இத்துடன் சுரைக்காய் கலவையைச் சேர்க்கவும்.
5. கடைசியில் எண்ணெய்யில் கடுகு, கறிவேப்பிலை போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.