கத்தரிக்காய் வறுவல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் - 4 எண்ணம் (பிஞ்சாக இருத்தல் நல்லது)
2. சின்ன வெங்காயம் - 3 எண்ணம்
3. தேங்காய்த் துருவல் -2 தேக்கரண்டி
4. தக்காளி-1எண்ணம்
5. மிளகாய்த்தூள்-2 தேக்கரண்டி
6. மஞ்சள் தூள் - சிறிது
7. சோம்பு- சிறிது
8. கருவேப்பில்லை - சிறிது
9. உப்பு - தேவையான அளவு
10. எண்ணெய்- தேவையான அளவு.
செய்முறை:
1. கத்தரிக்காயினை நீளவாக்கில் நான்காய் வெட்டி கொள்ளவும்.
2. தக்காளி, வெங்காயத்தைச் சிறியதாக நறுக்கிக் கொள்ளவும்.
3. தேங்காய், சோம்பு, நறுக்கிய வெங்காயம் சேர்த்து அரைக்கவும்.
4. கத்தரிக்காய், மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தக்காளி,தேங்காய் விழுது, கறிவேப்பில்லை, உப்பு சேர்த்துப் பிசறி சில நிமிடங்கள் வைத்திருக்கவும்.
5. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் கத்தரிக்காய் பிசறி வைத்தது, தண்ணீர் சேர்த்து வேக விட்டு, எண்ணெய் ஊற்றி வறுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.