கருணைக்கிழங்கு மசியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கருணைக்கிழங்கு – 1/4 கிலோ
2. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
3. இஞ்சி – சிறிய துண்டு
4. எலுமிச்சம் பழம் – 1 எண்ணம்
5. வெல்லம் (பொடித்தது) – 2 தேக்கரண்டி
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
9. பெருங்காயத்தூள் – சிறிது
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி அதில் கருணைக்கிழங்கைப் போட்டு வேகவைத்துத் தோல் உரித்து நன்கு மசித்துக் கொள்ளவும்.
2. பச்சை மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கவும்.
3. வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், அதில் கடுகு, கடலைப்பருப்பு, இஞ்சி, பச்சை மிளகாய் போட்டுத் தாளிக்கவும்.
4. அத்துடன் மஞ்சள்தூள், பெருங்காயத்தூள், உப்பு போட்டு, மசித்த கிழங்குடன் சேர்க்கவும்.
5. எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து அதன் சாற்றைக் கலக்கவும்.
6. கடைசியாக வெல்லத்தூள் சேர்த்து இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.