பீர்க்கங்காய் கூட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் – 2 எண்ணம்
2. பாசிப்பருப்பு – 100 கிராம்
3. தேங்காய்த் துருவல் – 4 தேக்கரண்டி
4. சீரகம் – 1 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
6. கடுகு - 1 தேக்கரண்டி
7. உளுத்தம்பருப்பு – 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு
9. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. பீர்க்கங்காயை தோல் சீவிப் பொடியாக நறுக்கவும்.
2. பாசிப்பருப்பை குழைவாக வேக வைக்கவும்.
3. பீர்க்கங்காயை வேக விட்டு, அதில் வேக வைத்த பாசிப் பருப்பை சேர்க்கவும்.
4. தேங்காய்த் துருவல், சீரகம், பச்சை மிளகாய் மூன்றையும் அரைத்து, உப்பு கலந்து சேர்க்கவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போட்டுத் தாளித்துச் சேர்க்கவும்.
6. நன்கு கொதிக்க விட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.