காய்கறி தயிர் பச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. காரட் - 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. மல்லித்தழை - சிறிது
7. தயிர் - 200 மி.லி.
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெள்ளரியின் தோல் மற்றும் விதைப்பகுதியை நீக்கி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. காரட்டின் தோலைச் சீவி, வெள்ளரித் துண்டின் அளவிற்கு வெட்டிக் கொள்ளவும்.
3. தக்காளியை இரண்டாக வெட்டி, அதனுள் இருக்கும் விதை மற்றும் சாறு ஆகியவற்றை நீக்கி வெட்டிக் கொள்ளவும்.
4. பச்சை மிளகாயைக் கீறி விதையை நீக்கி விட்டுப் பொடியாக நறுக்கவும்.
5. மல்லித்தழையையும், வெங்காயத்தையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
6. தயிரை நன்றாகக் கடைந்து அத்துடன் உப்பு சேர்த்துக் கலக்கவும்.
7. கடைந்த தயிரை ஒரு பாத்திரத்தில் ஊற்றி அதில் நறுக்கி வைத்துள்ள எல்லாவற்றையும் சேர்த்து நன்றாகக் கிளறி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.