காய்கறிப் பொரியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முருங்கைக்காய் – 1 எண்ணம்
2. சிறிய கத்திரிக்காய் – 5 எண்ணம்
3. பச்சைப் பட்டாணி – 1 கிண்ணம்
4. பெரிய வெங்காயம் – 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. தக்காளி – 2 எண்ணம்
7. தேங்காய்த் துருவல் – 3 தேக்கரண்டி
8. கடுகு – 1/2 தேக்கரண்டி
9. மிளகாய்த்தூள் – 1/4 தேக்கரண்டி
10. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. வெங்காயத்தை சிறிதாக நறுக்கி வைக்கவும்.
2. கத்திரிக்காய், முருங்கைக்காய் ஆகியவற்றை அளவான துண்டுகளாக நறுக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் கடுகு போட்டுத் தாளிக்கவும்.
4. நறுக்கிய கத்திரிக்காய், முருங்கைக்காய், பச்சைப் பட்டாணி, பச்சை மிளகாய், மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்த்துக் கிளறவும்.
5. நன்கு வதங்கி வரும்போது தக்காளி துண்டுகள், கால் கிண்ணம் தண்ணீர் விட்டு வேகவிடவும்.
6. தண்ணீர் வற்றிக் காய்கள் வெந்ததும் தேங்காய்த் துருவல் தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.