வெள்ளரிக்காய் கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
2. பாசிப்பருப்பு - 50 கிராம்
3. சாம்பார் தூள் - 1/2 தேக்கரண்டி
4. மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
5. உப்பு - தேவையான அளவு
6. எண்ணை - 1 தேக்கரண்டி
7. கடுகு - 1/2 தேக்கரண்டி
8. கறிவேப்பிலை - சிறிது
9. சிறிய வெங்காயம் - 2 எண்ணம்
செய்முறை:
1. வெள்ளரிக்காயின் தோலைச் சீவி விட்டு, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. பாசிப்பருப்புடன் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வேக வைக்கவும். (குழைய விடக் கூடாது).
3. பருப்பு வெந்தவுடன், அதில் நறுக்கிய வெள்ளரிக்காய்த் துண்டுகளைப் போட்டு அத்துடன் சாம்பார் தூள், உப்பு சேர்த்து சில நிமிடங்கள் வேக விட்டு இறக்கவும்.
4. பின்னர் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை ஆகியவற்றைப் போட்டுத் தாளித்துச் சேர்க்கவும் கொட்டவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.