சேனைக்கிழங்கு வறுவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சேனைக்கிழங்கு - 200 கிராம்
2. கடலைப்பருப்பு - 100 கிராம்
3. மல்லி - 4 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் - 10 எண்ணம்
5. சின்ன வெங்காயம் - 8 எண்ணம்
6. பூண்டு - 4 பற்கள்
7. சோம்பு - 1/2 மேசைக்கரண்டி
8. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் - 150 மி.லி.
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. சேனைக்கிழங்கைத் தோல் சீவி, செவ்வகத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. கிழங்குடன் மஞ்சள் பொடி, உப்பு சேர்த்து அரை வேக்காடு வேக வைத்துத் தண்ணீரை வடிகட்டி விடவும்.
3. கடலைப்பருப்பு, மல்லி விதை, மிளகாய் வற்றல், சோம்பு இவற்றை ஒன்றாகச் சேர்த்து மொறுமொறுப்பாகப் பொடிக்கவும்.
4. சின்ன வெங்காயம், பூண்டு இரண்டையும் அதனுடன் சேர்த்து, சிறிதளவு தண்ணீரும் சேர்த்து விழுதாக அரைக்கவும்.
5. இந்த விழுதை வேகவைத்து ஆறிய கிழங்குகளுடன் நன்கு கலந்து ஒரு பத்து நிமிடம் அப்படியே வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய்விட்டுக் காய்ந்ததும் மசாலாவுடன் பிசறிய கிழங்கை கொஞ்சம் கொஞ்சமாகப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.