பாகற்காய் பொறியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பாகற்காய் - 4 எண்ணம்
2. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
3. மிளகாய்த்தூள் - 1 தேக்கரண்டி
4. கடுகு - 1/2 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. வெங்காயம் - 1/4 எண்ணம்
7. எண்ணெய் - தேவையான அளவு
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பாகற்காயைச் சிறிய துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
2. உப்பு, மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து இரண்டு மணி நேரம் வரை சிறிது தண்ணீர் சேர்த்து ஊற விடவும்.
3. வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பச்சை மிளகாய், வெங்காயம் ஆகியவற்றைச் சேர்க்கவும்.
4. வெங்காயம் நன்கு வதங்கியதும் பாகற்காயைப் பிழிந்து, நீரில்லாமல் சேர்க்கவும்.
5. பாகற்காய் நன்கு வதங்கியதும் இறக்கிப் பறிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.