பீன்ஸ் பொறியல்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பீன்ஸ் - 400 கிராம்
2. பெரிய வெங்காயம் - 1 எண்ணம்
3. தக்காளி - 1 எண்ணம்
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பூண்டு - 5 பல்
6. கடுகு உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
7. பெருங்கயத் தூள் - 1/2 தேக்கரண்டி
8. தேங்காய்த் துருவல் - 2 தேக்கரண்டி
9. எண்ணெய் - தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு
11. கருவேப்பிலை - சிறிது
12. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. பீன்ஸை மிகச் சிறிய துண்டுகளாக நறுக்கித் தண்ணீரில் கழுவி வைத்துக்கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மல்லி இலை போன்றவைகளை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அதில் நறுக்கி வைத்திருக்கும் பீன்ஸ் துண்டுகளுடன் உப்பு போட்டு வேகவைத்துத் தண்ணீரை வடித்து விடவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம்பருப்பு போடவும். கடுகு நன்றாக வெடித்ததும், பெருங்காயத்தூள் சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் கருவேப்பிலையை போட்டு உடன் நறுக்கி வைத்துள்ள பூண்டின் துண்டுகளைப் போட்டு வதக்கவும்.
6. நன்றாக வதங்கியதும், நறுக்கி வைத்துள்ள வெங்காயம், தக்காளி மற்றும் பச்சை மிளகாய் இவைகளை போட்டு நன்றாக வதக்கவும்.
7. அத்துடன் வேகவைத்த பீன்ஸைப் போட்டு நன்றாக கிளறவும். அதன் பிறகு அதை மூடியிட்டு ஐந்து நிமிடம் மிதமான நெருப்பில் வைக்கவும்.
8. கடைசியாகத் தேங்காய்த் துருவலைப் போட்டு நன்றாக கிளறி விட்டு, மல்லி இலையை போட்டு இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.