காளான் 65
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான் - 100 கிராம்
2. தயிர் - 1 தேக்கரண்டி
3. இஞ்சிப்பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
4. மிளகாய்த் தூள் - 1 1/2 தேக்கரண்டி
5. சோள மாவு - 1 தேக்கரண்டி
6. சிகப்புப் பொடி (உணவுக்கானது) - சிறிது
7. கறிவேப்பிலை - சிறிது
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் துண்டுகளாக நறுக்கிய காளான், இஞ்சிப்பூண்டு விழுது, தயிர், மிளகாய்த்தூள், சோளமாவு, சிகப்புப் பொடி, கறிவேப்பிலை, உப்பு சேர்த்துக் கலந்து நன்றாகப் பிரட்டி வைக்கவும்.
2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், காளான்களைப் போட்டுச் சிவக்கப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.