காளான் பட்டானிக் கூட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பட்டன் காளான்- 200 கிராம்
2. உரித்த பச்சைப் பட்டாணி - 1/2 கப்
3. தக்காளி- 1எண்ணம்
4. பூண்டு - 4 பற்கள்
5. சின்னவெங்காயம்- 10 எண்ணம்
6. இஞ்சிப்பூண்டு விழுது- 2 தேக்கரண்டி
7. கறிமசாலாத் தூள் - 1 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி
9. மல்லித்தழை - சிறிது
10. புதினா - சிறிது
11. பட்டை - 1 துண்டு
12. ஏலக்காய் - 1 எண்ணம்
13. நல்லெண்ணெய் - தேவையான அளவு
14. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. காளானைச் சுத்தப்படுத்தி மஞ்சள்தூள் கலந்து பிசறி வைக்கவும்.
2. வெங்காயம், பூண்டு ஆகியவற்றை உரித்து வைக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் பட்டை, ஏலக்காய் போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் இஞ்சிப்பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி, மல்லி, புதினா சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் பச்சைப் பட்டாணி, காளான், உப்பு, கறி மசாலாத் தூள் சேர்த்துப் பிரட்டி விடவும்.
6. காளான் மற்றும் பட்டாணி நன்கு வெந்ததும் தண்ணீர் வற்றும் வரைச் சுருளக் கிளறி இறக்கவும்.
7. அதில் மேலாக மல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.