சில்லி கோபி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. காலி ப்ளவர் - 1 எண்ணம்
2. மிளகாய் வற்றல் - 5 எண்ணம்
3. சோள மாவு - 1 கப்
4. இஞ்சிப் பூண்டு விழுது - 1 தேக்கரண்டி
5. அஜினாமோட்டோ - 1 சிட்டிகை
6. மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
7. நல்லெண்ணெய் - 1 தேக்கரண்டி
8. எண்ணெய் - தேவையான அளவு (பொறிப்பதற்கு)
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் காலிப்ளவரை துண்டுகளாக நறுக்கிப் போட்டு, தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து சில நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி வைக்கவும்.
2. பின்னர் அந்த நீரை வடிகட்டி வேகவைத்த காலிபிளவர் துண்டுகளைத் தனியாக வைக்கவும்.
3. மிளகாய் வற்றலைச் சிறிது நீர் விட்டு விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
4. சோளமாவு, உப்பு, அஜினாமோட்டோ, நல்லெண்ணெய், இஞ்சிப் பூண்டு விழுது, மிளகாய்த் தூள், மிளகாய் வற்றல் விழுது சேர்த்து தேவையான அளவு நீர் விட்டு பஜ்ஜி மாவு பதத்தை விட சிறிது கெட்டியாகக் கலந்து கொள்ளவும்.
5. கலந்து வைத்திருக்கும் கலவையில் காலிபிளவர் துண்டுகளைப் போட்டுப் பிரட்டி வைக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அந்தக் காலிப்பிளவர் துண்டுகளைப் பொறித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.