பீர்க்கங்காய் பால் கூட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பீர்க்கங்காய் - 1 கப் (சிறு துண்டுகளாக நறுக்கியது)
2. தேங்காய்ப் பால் - 1/2 கப்
3. கடுகு - 1 தேக்கரண்டி
4. சோம்பு - 1 தேக்கரண்டி
5. பட்டை - 1 சிறிய துண்டு
6. அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி
7. மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
8. பச்சைமிளகாய் - 2 எண்ணம்
9. பால் - 1/2 கப்
10. சர்க்கரை - 1/2 தேக்கரண்டி
11. எண்ணெய் - தேவையான அளவு
12. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பீர்க்கங்காய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்துச் சிறிது தண்ணீர் சேர்த்து வேகவிட்டுக் கொள்ளவும்.
2. ஒரு கடாயில் எண்ணெய் சிறிது விட்டுக் காய்ந்ததும், கடுகு போட்டுத் தாளித்து, அதனுடன் சோம்பு, பட்டை போட்டு வதக்கவும்.
3. பின்னர் அதில் பச்சை மிளகாய் கீறிப் போட்டு வதக்கவும்.
4. அத்துடன் வெந்த பீர்க்கங்காய் போட்டுப் பிரட்டி, அரிசி மாவைப் பாலில் கரைத்து ஊற்றவும்.
5. இரண்டு கொதி வரவும் சர்க்கரை சேர்க்கவும். கடைசியாக இறக்கும் போது தேங்காய்ப் பால் ஊற்றிக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.