மிளகாய் - கத்தரிக்காய் பச்சடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. கத்தரிக்காய் – 1/4 கப் (பொடியாக நறுக்கியது)
2. பச்சைமிளகாய் – 1/2 கப்
3. புளி - நெல்லிக்காய் அளவு
4. வெல்லம் – சிறு துண்டு
5. மஞ்சள்தூள் – 1/4 தேக்கரண்டி
6. கடுகு - 1/4 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் – 1/4 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சை மிளகாயை உப்பு சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் கத்தரிக்காயைப் போட்டு வதக்கவும்.
3. கத்தரிக்காய் வதங்கியதும் அதில் பச்சை மிளகாய் விழுதைச் சேர்த்துப் புளியைக் கெட்டியாகக் கரைத்து விடவும்.
4. அதில் வெல்லத்தை போட்டு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
5. எண்ணெய் பிரிந்து விழுது போல வரு ம்போது இறக்கி விடவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.