வாழைப்பூ வெள்ளரிக்காய் பச்சடி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வாழைப்பூ - 1 எண்ணம்
2. வெள்ளரிக்காய் - 1 எண்ணம்
3. தயிர் - 1 கப்
4. வெங்காயம் (சிறியது) - 5 எண்ணம்
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. பெருங்காயத்தூள் - சிறிது
7. உப்பு - தேவையான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. மல்லித்தழை - சிறிது.
செய்முறை:
1. வாழைப்பூவை அதிலுள்ள நரம்புகளை நீக்கிச் சுத்தம் செய்து வைக்கவும்.
2. வெள்ளரிக்காயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. வெங்காயம், மல்லித்தழையைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
4. நறுக்கிய வாழைப்பூ, வெள்ளரிக்காயைக் கலந்து கொள்ளவும்.
5. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, பெருங்காயத்தூள் சேர்த்துத் தாளிக்கவும்.
6. தாளிசத்துடன் வாழைப்பூ, வெள்ளரிக்காய் கலவையைச் சேர்த்துக் கலந்து வேக வைத்து இறக்கவும்.
7. அதனுடன் தயிர், உப்பு, மல்லித்தழை, வெங்காயம் சேர்த்துக் கலந்து பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.