சௌசௌ கூட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. சௌசௌ – 1 கப் (பொடியாக நறுக்கியது)
2. பாசிப்பருப்பு – 1 / 4 கப்
3. பச்சைமிளகாய் – 2 எண்ணம்
4. சீரகம் – 1 / 2 தேக்கரண்டி
5. உளுத்தம்பருப்பு – 1தேக்கரண்டி
6. தேங்காய்துருவல் – 1மேசைக்கரண்டி
7. மஞ்சள்தூள் – 1 / 4 தேக்கரண்டி
8. பெருங்காயத்தூள் – 1 / 4 தேக்கரண்டி
9. உப்பு – தேவையான அளவு
தாளிக்க
10. கடுகு – 1 / 4 தேக்கரண்டி
11. உளுத்தம்பருப்பு – 1 / 4 தேக்கரண்டி
12. மிளகாய் வற்றல் – 2 எண்ணம்
13. கருவேப்பிலை – சிறிதளவு
14. எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் பாசிப்பருப்பு, மஞ்சள்தூள் சேர்த்து வேக வைக்கவும்.
2. பாசிப்பருப்பு முக்கால் பாகம் வெந்தவுடன், அதில் நறுக்கி வைத்துள்ள சௌசௌ, உப்பு போட்டு வேக விடவும்.
3. உளுத்தம் பருப்பை இலேசாக வறுத்து எடுக்கவும்.
4. தேங்காய், வறுத்த உளுத்தம்பருப்பு, பச்சை மிளகாய், சீரகம் ஆகியவற்றை விழுதாக அரைத்து எடுக்கவும்.
5. அரைத்த விழுதைக் காயுடன் சேர்த்துக் கொதிக்க வைத்து, பெருங்காயத்தூள் சேர்த்து இறக்கவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் தாளிக்க கொடுத்துள்ள பொருட்களைப் போட்டுத் தாளித்து, கூட்டில் சேர்த்துக் கலக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.