உருளைக்கிழங்கு ரோஸ்ட்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு – 3 எண்ணம்
2. வெங்காயம் – 1 எண்ணம்
3. பச்சை மிளகாய் – 4 எண்ணம்
4. கடுகு – 1 தேக்கரண்டி
5. உளுத்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
6. பெருங்காயத் தூள் – 1 சிட்டிகை
7. மிளகாய்த் தூள் – 2 தேக்கரண்டி
8. மஞ்சள் தூள் – 1/2 தேக்கரண்டி
9. எண்ணெய் – தேவையான அளவு
10. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. உருளைக்கிழங்கை வேகவைத்துத் தோலுரித்து வைக்கவும்.
2. வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, பெருங்காயத் தூள் சேர்த்துத் தாளிக்க வேண்டும்.
5. அதில் வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.
6. பின்பு, அதில் உருளைக்கிழங்கைச் சேர்த்து நன்கு மொறுமொறுவென்று வரும் வரை வதக்க வேண்டும்.
7. பிறகு, அதில் மிளகாய்த்தூள் சேர்த்துப் பச்சை வாசனை போக நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.