வெங்காய வடகம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உரித்த வெங்காயம்- 2 கிலோ
2. உளுந்தம் பருப்பு- 200 மி.லி
3. உப்பு- 150 மி.லி
4. வற்றல்- 80 எண்ணம்
5. நல்லெண்ணெய்- 1 மேஜைக் கரண்டி
6. வெள்ளைப் பூண்டு- 3 எண்ணம்
7. சீரகம்- 1 மேஜைக் கரண்டி
8. கடுகு- 1 மேஜைக் கரண்டி
9. காயம்- சிறிது
10. மஞ்சள் தூள்- 1 தேக்கரண்டி
11. கருவேப்பிலை- தேவைக்கேற்ப
செய்முறை:
1.சிறிய வெங்காயத்தை பெரிய அளவாகப் பார்த்து வாங்கி உரித்து சற்று பெரிய துண்டுகளாக ஒரே அளவில் வெட்டிக் கொள்ளவும்.
2. பூண்டு, கருவேப்பிலை இவற்றை நறுக்கிக் கொள்ளவும்.
3. கடுகு, சீரகம், மஞ்சள் எல்லாவற்றையும் வெங்காயத்துடன் கலந்து வைக்கவும்.
4. உளுந்தை நன்கு ஊற வைத்து தோசைக்கு ஆட்டுவது போல் ஆட்டி வைக்கவும்.
5. பின் வற்றல், காயம், உப்பு சேர்த்து நன்கு ஆட்டவும்.
6. உளுந்து மாவு, வெங்காயம் மற்றும் அனைத்துப் பொருட்களையும் ஒன்று சேரும்படி கலக்கவும்.
7. ஒரு மேஜைக் கரண்டி நல்லெண்ணெய் ஊற்றி கலந்து கொள்ளவும்.
8. வெள்ளைத் துணியில் இந்தக் கலவையைச் சிறிது சிறிதாக உருண்டை போட்டு சூரிய ஒளியில் காய வைக்கவும்.
9. மறுநாள் அதைத் திருப்பிப் போட்டு காய வைக்கவும்.
10. நான்கு அல்லது ஐந்து நாட்களில் இது நன்றாகக் காய்ந்து விடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.