கம்பு - பாலக் கீரை வடகம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. கம்பு மாவு - 2 கப்
2. அரிசி மாவு - 1/2 கப்
3. ஜவ்வரிசி - 1/2 கப்
4. பாலக்கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது - 1 கப்
5. சீரகம் - 1 தேக்கரண்டி
6. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
7. புளித்த மோர் - 1 கப்
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. கம்பு மாவு, அரிசி மாவு, உப்பு, பெருங்காயம், சீரகம் சேர்த்துக் கலக்கவும்.
2. அதனுடன் பாலக் கீரை, பச்சைமிளகாய் அரைத்த விழுது, புளித்த மோர் மற்றும் தேவையான தண்ணீர் சேர்த்துக் கலக்கிக் கொதிக்க விடவும்.
3. நன்கு வெந்ததும் இறக்கி, அதனுடன் முதல் நாள் இரவே ஊற வைத்த ஜவ்வரிசியைக் கலக்கவும்.
4. வாழை இலை அல்லது மந்தார இலையை எடுத்து, அதில் மாவை வைத்துத் தட்டவும்.
5. பின்னர் அவற்றைச் சிறிதளவு எண்ணெய் தடவி, ஆவியில் வேகவிட்டு எடுத்து, நன்கு காய விடவும்.
6. காய்ந்த வடகத்தைக் காற்றுப் புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்து, தேவையான போது எடுத்துப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.