தினைத் தக்காளி வடகம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தினை மாவு - 2 கப்
2. ஜவ்வரிசிமாவு - 1/2 கப்
3. தக்காளிச்சாறு - 1 1/2 கப்
4. மிளகாய்த்தூள் - 2 மேசைக்கரண்டி
5. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு பாத்திரத்தில் தக்காளிச்சாறு, உப்பு, மிளகாய்த்தூள், பெருங்காயம், தேவையான அளவு நீர் விட்டுக் கொதிக்க விடவும்.
2. கொதி வரும்போது கலந்து வைத்துள்ள தினைமாவு, ஜவ்வரிசி மாவு சேர்த்துக் கெட்டியாகக் கிளறவும்.
3. பிறகு அதனை ஆறவிட்டுச் சிறிது, சிறிதாகக் கிள்ளி வைத்து நன்கு காய விடவும்.
4. நன்கு காய்ந்ததும் சேர்த்து வைத்துக் கொண்டு, தேவையான போது எடுத்துப் பொரிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.