மக்காச்சோளக் கூழ் வடகம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. மக்காச்சோள மாவு - 1 கப்
2. அரிசி மாவு - 1/2 கப்
3. சீரகம் - 1 தேக்கரண்டி
4. பிரண்டைச் சாறு - 2 மேசைக்கரண்டி
5. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
6. பச்சைமிளகாய் விழுது - 1 தேக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. மக்காச்சோள மாவு, அரிசி மாவு, உப்பு, சீரகம், பிரண்டைச்சாறு, பெருங்காயம், பச்சைமிளகாய் விழுது சேர்த்துக் கலக்கவும்.
2. ஒரு கனமான பாத்திரத்தில் ஐந்து கப் நீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
3. அதில் மாவைக் கலந்துக் கிளறி, வெந்ததும் இறக்கி, ஆறவிட்டு, கரண்டியில் எடுத்துத் துணியில் ஊற்றி நல்ல வெயிலில் இரண்டு மூன்று நாட்கள் நன்கு காயவைத்து எடுத்து வைக்கவும்.
4. தேவையான போது எடுத்துப் பொரித்தெடுத்துப் பயன்படுத்தவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.