முறுக்கு வடகம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 2 கப்
2. ஜவ்வரிசி - 1 கப்
3. சீரகம் -1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பெருங்காயம் - சிறிது
6. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. காலையில் அரிசியை 4 அல்லது 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த அரிசியை கிரைண்டரில் அரைத்தெடுக்கவும்.
3. மாலையில் ஜவ்வரிசி, உப்பு சேர்த்துக் கரைத்து வைக்கவும்.
4. மறுநாள் காலை ஜவ்வரிசி ஊறி கெட்டியாக முறுக்கு மாவு பதத்தில் இருக்கும்.
5. பச்சை மிளகாயை விழுதாக அரைத்து மாவுடன் சேர்க்கவும்.
6. பின்னர் அதனுடன் சீரகம், பெருங்காயம் சேர்த்துப் பிசைந்து கொள்ளவும்.
7. முறுக்கு அச்சில் கொஞ்சமாக மாவை எடுத்துக் கொள்ளவும்.
8. இட்லிப் பானையை அடுப்பில் வைத்து ஒரு இட்லித் தட்டில் ஈரத்துணியைப் போட்டு ஒவ்வொரு குழியிலும் சிறுசிறு முறுக்குகளாக பிழிந்து விட்டு வேக விடவும்.
9. நன்றாக வெந்ததும் எடுத்து தனித்தனியாக தட்டில் வைத்து வெய்யிலில் காயவைக்கவும். (வீட்டிற்குள்ளேயே வைத்தும் உலர்த்தலாம்)
10. நன்றாகக்காய்ந்ததும், கண்ணாடி / பிளாஸ்டிக் பாட்டிலில் வைத்துக் கொள்ளவும்.
11. தேவைப்படும் போது, ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும் ஒவ்வொரு முறுக்காகப் போட்டு இரு புறமும் திருப்பி விட்டு பொரித்தெடுத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.