உருளைக்கிழங்கு அப்பளம்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. உருளைக்கிழங்கு - 500 கிராம்
2. ஜவ்வரிசி - 500 கிராம்
3. அரிசிமாவு - 100 கிராம்
4. மிளகாய்த் தூள் - 4 தேக்கரண்டி
5. பெருங்காயத் தூள் - 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - 50 கிராம்
7. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1.ஜவ்வரிசியைச் சுத்தம் செய்து மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
2. உருளைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்து மசித்துக் கொள்ளவும்.
3. மசித்த உருளைக்கிழங்குடன் ஜவ்வரிசி மாவு, மிளகாய்ப் பொடி, உப்பு, காயம் கலந்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
4. கல்லுரலில் சிறிது எண்ணெய் தடவிக் கொண்டு உருளைக் கிழங்கு, ஜவ்வரிசி கலவையைப் போட்டு சிறிது சிறிதாக எண்ணெய் தடவி மிருதுவாக இடிக்கவும்.
5. இடித்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி அரிசி மாவில் தொட்டு அப்பளமாக இடவும்.
6. இந்த அப்பளங்களை வெயிலில் உலர்த்தி எடுத்து வைத்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.