அவல் வடகம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் - 3 கிண்ணம்
2. உளுத்தம்பருப்பு - 1 கிண்ணம்
3. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
4. பச்சைமிளகாய் - 10 எண்ணம்
5. கறிவேப்பிலை, மல்லித்தழை - 2 தேக்கரண்டி
6. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லி ஆகியவற்றைப் பொடியாக நறுக்கவும்.
2. உளுத்தம்பருப்பை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
3. அவலை நன்றாகக் கழுவித் தண்ணீரை வடித்து விடவும்.
4. ஊறிய பருப்புடன் கறிவேப்பிலை, மல்லித்தழை சேர்த்து கெட்டியான விழுதாக அரைக்கவும்.
5. ஊறிய அவலை உளுந்துமாவுடன் சேர்த்து, நறுக்கிய வெங்காயம், உப்பு சேர்த்துக் கலக்கவும்.
6. அதைச் சிறு வடகமாக உருட்டி, வெயிலில் நன்கு காய வைத்து எடுக்கவும்.
7. தேவைப்படும்போது எண்ணெயில் பொரித்துக் கொள்ளவும்.
குறிப்புகள்:
1. தேவையான போது எண்ணெய்யில் பொறித்து எடுத்துச் சாப்பிடலாம்.
2. நிறம், வாசனை விரும்புபவர்கள் தேவையானவற்றை வாங்கி மாவுடன் சேர்த்துக் கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.