சோறு வடகம்
மாணிக்கவாசுகி செந்தில்குமார்
தேவையான பொருட்கள்:
1. புழுங்கலரிசி - 1/4 கிலோ
2. சீரகம் - 2 தேக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 3 எண்ணம்
4. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. அரிசியை ஊற வைத்துச் சாதம் வடிக்கவும்.
2. பின் வடித்த சாத்தில் தண்ணீர் ஊற்றி வைத்து மூன்று நாள்களுக்கு பின் சாதத்துடன் உப்பு, காய்ந்த மிளகாய், சீரகம் சேர்த்து கொர கொரப்பாக ஆட்டி எடுக்கவும்.
3. பின் ஒரு வெள்ளைத் துணியைத் தரையில் விரித்து அதில் ஆட்டிய வடகத்தை புள்ளி வைப்பது போல கொஞ்சம் கொஞ்சமாக வைத்து பரப்பிக் காய வைக்கவும்.
4. இது போன்று மூன்று நாட்கள் வரை நன்கு காய வைக்கவும்.
குறிப்பு: தேவைப்படும் போது சோறு வடகத்தை எண்ணெயில் போட்டுப் பொரித்து எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.