வரகுக் கூழ் வடகம்
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வரகரிசி - 500 கிராம்
2. ஜவ்வரிசி - 100 கிராம்
3. சீரகம் - 2 தேக்கரண்டி
4. பெருங்காயம் - 1/4 தேக்கரண்டி
5. புளித்த மோர் - 1 கப்
6. பச்சைமிளகாய் - 4 எண்ணம்
7. கறிவேப்பிலை - சிறிதளவு
8. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. வரகரிசியை மூன்று மணி நேரம் ஊற வைத்து, விழுதாக அரைத்துக் கொள்ளவும்.
2. அதனுடன் உப்பு சேர்த்துக் கலக்கிப் புளிக்க விடவும்.
3. மறுநாள் பெரிய பாத்திரத்தில் நான்கு லிட்டர் தண்ணீர் விட்டு அரைத்த மாவை அதனுடன் சேர்த்துக் கலக்கவும்.
4. புளித்த மோர், பெருங்காயம், கறிவேப்பிலை, பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், சீரகம் சேர்த்து நன்கு கலக்கிக் கொதிக்க விடவும்.
5. அதனுடன் ஜவ்வரிசியையும் சேர்த்துக் கிளறவும். கெட்டியாக கூழ் காய்ச்சி, கரண்டியால் எடுத்துப் பாலிதீன் ஷீட் அல்லது வெள்ளைத்துணியில் வட்ட வட்டமாக ஊற்றவும்.
6. நன்கு காய வைத்து எடுத்துக் காற்று புகாத பாத்திரத்தில் அடைத்து வைத்துத் தேவைப்படும் போது எடுத்துப் பொறித்துக் கொள்ளவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.