புளி அவல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அவல் (கெட்டி அவல்) – 1 கோப்பை
2. புளி – நெல்லிகாய் அளவு
3. கடுகு – 1/4 தேக்கரண்டி
4. மிளகாய் வற்றல் – 1 எண்ணம்
5. உளுத்தம்பருப்பு - 1 தேக்கரண்டி
6. கடலைப்பருப்பு – 1 தேக்கரண்டி
7. பெருங்காயத்தூள் – சிறிது
8. இஞ்சி – சிறு துண்டு
9. பச்சை மிளகாய் – 1 எண்ணம்
10. ரசப்பொடி – 1 தேக்கரண்டி
11. கறிவேப்பிலை – சிறிது
12. எண்ணெய் – 3 தேக்கரண்டி
13. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. புளியைச் சிறிது தண்ணீரில் ஊறவைத்துப் பின்னர் கரைத்து வடிகட்டி எடுக்கவும்.
2. உப்பு, ரசப்பொடி கலந்து, அதில் அவலை கலந்து ஊறவிடவும்.
3. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், மிளகாய் வற்றல், கடுகு, உளுத்தம்பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தூள் சேர்த்து வறுக்கவும்.
4. அதில் நறுக்கிய இஞ்சி, பச்சைமிளகாய்த் துண்டுகள், கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
5. அத்துடன் பிசிறிய அவலைப் போட்டு சில நிமிடம் கிளறவும்.
6. அவல் நன்கு உதிர்ந்து வந்ததும் இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.