வெஜிடபுள் சேமியா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. வறுத்த சேமியா - 1 கப்
2. காய்கறிகள் (நறுக்கியது) - 1/2 கப்
3. மிளகு - 1/2 தேக்கரண்டி
4. கிராம்பு - 2 எண்ணம்
5. ஏலக்காய் - 2 எண்ணம்
6. புதினா - சிறிது
7. பிரிஞ்சி இலை - சிறிது
8. நெய் - 1 தேக்கரண்டி
9. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. கடாயில் நெய் விட்டு, கிராம்பு, ஏலக்காய், மிளகு சேர்த்து வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
2. காய்கறிகளுடன் உப்பு சேர்த்து கடாயில் வதக்கி, பொடித்த மசாலாவைச் சேர்க்கவும்.
3. சேமியாவின் அளவுக்கேற்ப தண்ணீர் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. நன்றாகக் கொதித்ததும், சேமியாவைப் போட்டுக் கிளறி, பிரிஞ்சி இலை போட்டு புதினா தூவி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.