கேழ்வரகு புட்டு
ராஜேஸ்வரி மணிகண்டன்
தேவையான பொருட்கள்:
1. ராகி மாவு – 1 கப்
2. நெய் – 1 மேசைக்கரண்டி
3. துருவிய தேங்காய் – 1/2 கப்
4. சர்க்கரை – 1/2 கப்
5. ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. உப்பு – தேவையான அளவு.
செய்முறை:
1. முதலில் ராகி மாவை வெறும் வாணலியில் வாசம் வரும் வரை நன்றாக வறுத்துக் கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் தண்ணீரைச் சூடாக்கி வைக்கவும்.
3. சூடான ராகி மாவு மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.
4. இத்துடன் கொதிக்கும் தண்ணீரை சிறிது சிறிதாகச் சேர்த்து புட்டு மாவு பதத்திற்கு மாவைப் பிசறி வைக்கவும்.
5. இந்த மாவை இட்லிச் சட்டியில் வேக வைத்து எடுக்கவும்.
6. வேக வைத்த ராகி மாவுடன் சர்க்கரை, துருவிய தேங்காய், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றைக் கலந்து நன்றாகக் கிளறி பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.