முட்டைக் கொத்துப் பரோட்டா
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பரோட்டா – 5 எண்ணம்
2. முட்டை – 3 எண்ணம்
3. பெரிய வெங்காயம் – 2 எண்ணம்
4. தக்காளி – 1 எண்ணம்
5. பச்சை மிளகாய் – 2 எண்ணம்
6. மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி
7. மிளகாய்த்தூள் – 1/2 தேக்கரண்டி
8. மஞ்சள்தூள் – சிறிது
9. உப்பு – தேவையான அளவு
10. கருவேப்பிலை – சிறிது
11. சால்னா குழம்பு – 1/2 கப்.
செய்முறை:
1. பரோட்டாவை சிறு சிறு துண்டுகளாக ஒன்றிரண்டாக பிய்த்துக் கொள்ளவும்.
2. வெங்காயம், தக்காளி, மிளகாயைப் பொடியாக நறுக்கி வைக்கவும்.
3. முட்டையை உடைத்து ஊற்றி நன்றாகக் கலந்து வைக்கவும்.
4. ஒரு இரும்புக் கடாயில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் வெங்காயம், கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.
5. வெங்காயம் வதங்கியதும் மிளகாய்த்தூள், மிளகுத்தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6. அதனுடன் தக்காளி சேர்த்து நன்கு மசியும்படி வதக்கவும்.
7. வதக்கிய பொருட்களின் நடுவில் அடித்து வைத்துள்ள முட்டையை ஊற்றி நன்கு வதக்கிக் கொள்ளவும்.
8. கடைசியாக சால்னா குழம்பை ஊற்றி நன்கு கலக்கிக் கொள்ளவும்.
9. கடைசியாக பிய்த்து வைத்துள்ள பரோட்டாவை சேர்த்துக் கலக்கி, இரண்டு இரும்பு கரண்டிகளை வைத்துப் பரோட்டாவை நன்கு கொத்திக் கலக்கிச் சூடாகப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.