தயிர் சேமியா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சேமியா - 1/2 கப்
2. தயிர் - 2 மேசைக்கரண்டி
3. பால் - 1/2 கப்
4. கடுகு - 1/4 தேக்கரண்டி
5. பெருங்காயம் - 1 சிட்டிகை
6. பச்சை மிளகாய் - 1 எண்ணம்
7. கேரட் துருவல் - 2 தேக்கரண்டி
8. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்
9. உலர் திராட்சை - 10 எண்ணம்
10. இஞ்சித் துருவல் - 1/4 தேக்கரண்டி
11. மல்லித்தழை - சிறிது
12. எண்ணெய் - தேவையான அளவு
13. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. சேமியாவைத் தண்ணீர் சேர்த்து முக்கால் பதமாக வேகவைத்து எடுக்கவும்.
2. பின், நீரை வடித்துவிட்டுக் குளிர்ந்த நீரில் மூன்று முறை அலசி நீரை நன்றாக வடித்து விடவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் முந்திரி, உலர்திராட்சை இரண்டையும் சிவக்க வறுத்தெடுத்து வைக்கவும்.
4. அதே வாணலியில் கடுகு, பெருங்காயம் தாளித்து அதில் இஞ்சித் துருவல், கறிவேப்பிலை, நறுக்கிய பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிச் சேமியாவில் சேர்க்கவும்.
5. தயிரைக் கடைந்து, பால், உப்பு ஆகியவற்றையும் சேமியாவில் கலந்துக் கிளறிப் பின் மல்லித்தழை, காரட் துருவல், முந்திரி, உலர்திராட்சை போட்டு அலங்கரிக்கவும்.
குறிப்பு: கோடைக்காலத்தில் குளிர்பதனப்பெட்டியில் குளிர வைத்துச் சாப்பிட்டால் கோடைக்காலத்திற்கு இதமாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.