சத்துமாவு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. ராகி - 200 கிராம்
2. கம்பு -200 கிராம்
3. சம்பா கோதுமை - 200 கிராம்
4. பாசிப்பயறு - 200 கிராம்
5. நிலக்கடலை - 100 கிராம்
6. சிகப்பரிசி -100 கிராம்
7. சோளம் - 100 கிராம்
8. பொட்டு கடலை -100 கிராம்
9. குதிரைவாலி -100 கிராம்
10. சாமை -100 கிராம்
11. வரகு - 100 கிராம்
12. கொள்ளு -100 கிராம்
13. கருப்பு உளுந்து -100 கிராம்
14. பாதாம் - 25 கிராம்
15. முந்திரி பருப்பு - 25 கிராம்
16. சுக்கு - 10 கிராம்
செய்முறை:
1. மேலே உள்ள பொருட்களைத் தனித்தனியாக வறுத்து ஒன்றாகச் சேர்த்து மிஷினில் அரைத்து வைத்துக்கொள்ளவும்.
2. தேவைப்படும் பொழுது, கஞ்சி, புட்டு, மால்ட்டாகத் தயாரித்து உட்கொள்ளலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.