மூலிகை உளுந்தங்களி
சசிகலா தனசேகரன்
தேவையான பொருட்கள்:
1. வெள்ளை உளுத்தம் பருப்பு – 300 கிராம்
2. வெல்லம் – 250 கிராம்
3. நெய் – 200 கிராம்
4. சுக்குத்தூள் – 1 தேக்கரண்டி
5. ஏலக்காய்த்தூள் – 1 தேக்கரண்டி
6. அதிமதுரப்பொடி – 1 தேக்கரண்டி
7. நெல்லிக்காய்ப்பொடி – 1 தேக்கரண்டி
8. வெந்தயக்கீரைப்பொடி – 3 தேக்கரண்டி
9. ஆடாதொடைப்பொடி – 1 தேக்கரண்டி
10. தேங்காய்ப்பால் – 1 டம்ளர்.
தாளிக்க:
11. கடுகு – 1/2 தேக்கரண்டி
12. வெந்தயம் – 1/4 தேக்கரண்டி
13. உளுந்தம் பருப்பு – 1 தேக்கரண்டி
14. எண்ணெய் – 1 தேக்கரண்டி
15. பெருங்காயத்தூள் – சிறிதளவு
செய்முறை:
1. உளுத்தம்பருப்பை களைந்து 3 மணி நேரம் ஊற வைத்து மாவாக அரைத்துக் கொள்ளவும்.
2. கனமான அடிப்பகுதி உள்ள ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து நெய் விட்டுத் தேங்காப்பாலையும் தட்டிய வெல்லத்தையும் போட்டுக் கொதிக்கவிடவும்.
3. அது கொதித்ததும் தூள் மற்றும் பொடிகளை கலந்து உளுந்துமாவை நன்றாகக் கிளறி கொண்டிருக்கவும்.
4. மாவு வெந்து சுருண்டு வரும் பதத்தில் இறக்கவும்.
5. தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைத் தாளித்துச் சேர்த்துக் கலந்து ஆறியதும் உருண்டை பிடிக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.