ரவா கிச்சடி
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. வறுத்த ரவை - 2 கப்
2. தக்காளி - 1 எண்ணம்
3. இஞ்சி - 1 சிறு துண்டு
4. பச்சை மிளகாய் - 8 எண்னம்
5. புளி பேஸ்ட் 3 - 4 ஸ்பூன்ஸ்
6. கேரட், உருளை, பீன்ஸ், பச்சை பட்டாணி, கத்தரி போன்ற காய்கள் (நறுக்கியவை) - 1 1/2 கப்
7. உப்பு - தேவையான அளவு
தாளிக்க:
8. கடுகு - 1 தேக்கரண்டி
9. உளுந்து - 1 தேக்கரண்டி
10. கடலைப்பருப்பு - 1 தேக்கரண்டி
11. மஞ்சள் பொடி - 1/2 தேக்கரண்டி
12. கறிவேப்பிலை - சிறிது
13. எண்ணெய் - 4 தேக்கரண்டி
14. நெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
1. ஒரு ஆழமான வாணலியில் எண்ணெய் மற்றும் நெய் விடவும்.
2. தாளிக்கக் கொடுத்துள்ள பொருட்களைத் தாளிக்கவும்.
3. பச்சைமிளகாய், இஞ்சி போடவும் நன்கு வதக்கவும்.
4. தற்போது எல்லாக் காய்கறிகளையும் போட்டு நன்கு கிளறவும், உப்பு போட்டு இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
5. புளி பேஸ்ட் சேர்த்து நன்கு கிளறவும். பின்னர் இரண்டு நிமிடம் மூடி வைக்கவும்.
6. இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
7. நன்கு கொதித்ததும், அடுப்பைக் குறைத்து ரவையைச் சேர்த்துக் கிளறவும்.
8. நன்கு வெந்ததும் இறக்கிப் பரிமாறவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.