வெல்லப் புட்டு
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. புழுங்கல் அரிசி - 1 கப்
2. வெல்லம் - 3/4 கப்
3. நெய் - 1 மேசைக்கரண்டி
4. துவரம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
5. தேங்காய்த் துருவல் - 1/4 கப்
6. ஏலக்காய்த்தூள் - சிறிது
7. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
8. முந்திரி - 10 எண்ணம்
9. உப்பு - தேவையான அளவு
செய்முறை:
1. புழுங்கல் அரிசியை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து மிக்ஸியில் ரவையாகப் பொடித்துக் கொள்ளவும்.
2. இதில் உப்பு, மஞ்சள்தூள் சேர்த்துத் தயிர் சாதம் போல் தளரக் கலந்து, அத்துடன் துவரம் பருப்பையும் சேர்த்துக் குக்கரில் வேக விடவும்.
3. ஆறியதும் கட்டியில்லாமல் நன்றாக உதிர்த்துக் கொள்ளவும்.
4. வாணலியில் வெல்லம், சிறிது தண்ணீர் சேர்த்துக் கரைத்துக் கொதிக்க வைத்து வடிகட்டி, மீண்டும் அடுப்பில் வைத்துப் பாகு காய்ச்சவும்.
5. பாகை எடுத்துத் தண்ணீரில் போட்டால் முத்து போல் நிற்க வேண்டும்.
6. இந்தப் பதத்துக்கு வந்ததும் உதிர்த்த புட்டு, முந்திரி, தேங்காய்த் துருவல், ஏலக்காய்த்தூள், நெய் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
7. ஆறியதும் எடுத்தால் உதிர் உதிராக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.