ராகி அவல் புட்டு
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. ராகி அவல் - 2 கப்
2. சர்க்கரை - 2 கப்
3. முந்திரிப்பருப்பு - 5 எண்ணம்
4. தேங்காய்த் துருவல் -1/4 கப்
5. ஏலக்காய் - 4 எண்ணம்
செய்முறை:
1. ராகி அவலைச் சுடு தண்ணீரில் கொட்டி இரண்டு நிமிடம் கழித்து நன்றாக பிழிந்து எடுத்து, அதனை ஆவியில் வேகவைக்கவும்.
2. சர்க்கரை, ஏலக்காயைத் தனியாகப் பொடி செய்து வைக்கவும்.
3. ஒரு பாத்திரத்தில் வேகவைத்த ராகி அவலைக் கொட்டி அதனுடன் பொடி செய்த சர்க்கரை, ஏலக்காய், தேங்காய்த் துருவல் சேர்த்து நன்றாகக் கலக்கவும்.
4. முந்திரிப்பருப்பை சிறிது சிறிதாக உடைத்தோ அல்லது முழுமையாகவோச் சேர்த்துப் பரிமாறலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.