உக்காரை
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பயத்தம்பருப்பு – 1 கப்
2. கடலைப்பருப்பு – 1 கப்
3. வெல்லத்தூள் – 2 கப்
4. நெய் – 4 தேக்கரண்டி
5. முந்திரிப் பருப்பு – 50 கிராம்
6. தேங்காய் (சிறு துண்டுகள்) - 1/4 கப்
7. ஏலப்பொடி - சிறிது
8. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. பருப்புகளை நன்கு களைந்து நான்கு மணிநேரம் ஊற வைக்கவும்.
2. ஊற வைத்த பருப்புகளுடன் சிறிது உப்பு சேர்த்து, இட்லி மாவுப் பதத்திற்குக் கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
3. அரைத்த மாவை இட்லித் தட்டுகளில் இட்லியாக ஊற்றிப் பத்து நிமிடம் வேகவைத்து எடுத்து நன்கு ஆறவிடவும்.
4. நன்கு ஆறியபின், மிக்ஸியில் அதை இட்லிகளாக உடைத்துப் போட்டுப் பொடியாக உதிர்க்கவும்.
5. வெல்லத்தை சிறிது நீர் சேர்த்து முற்றிய பாகாகக் காய்ச்சி ஏலப்பொடி சேர்க்கவும்.
6. பின், அடுப்பைக் குறைவாக வைத்து, உதிர்த்த பொடியைச் சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
7. நெய்யைச் சூடாக்கி, உடைத்த முந்திரி, தேங்காய்த் துண்டுகளைப் பொரித்துச் சேர்க்கவும்.
8. ஆறியதும் ஒரு பாத்திரத்தில் அடைத்து வைத்து ஒரு நான்கு மணி நேரம் கழித்துப் பார்த்தால் உதிர்ந்து இருக்கும்.
9. அதன் பிறகு எடுத்துப் பயன்படுத்தலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.