அரிசி மாவு களி
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி மாவு – 1 1/4 கோப்பை
2. வெல்லம் (அ)கருப்பட்டி – 100 கிராம்
3. ஏலக்காய் - சிறிது
4. சுக்கு - சிறிது
5. மிளகு – சிறிது
6. நல்லெண்ணெய் – தேவையான அளவு
7. உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு கோப்பை பச்சரிசி மாவுக்கு 2 ½ கோப்பை தண்ணீர் எடுத்துக் கொதிக்க வைக்கவும்.
2. அதில் 1 தேக்கரண்டி அளவு பச்சரிசி மாவை எடுத்துத் தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்.
3. தண்ணீர் கொதித்த உடன் சிறிதளவு உப்பு, கரைத்த மாவை ஊற்றிக் கிண்டவும்.
4. பிறகு பச்சரிசி மாவைச் சிறிதுசிறிதாகப் போட்டு மிதமான வெப்பநிலையில் வைத்துக் கிண்டவும்.
5. களியை அடிப்பிடித்து விடாமல் கிண்டவும். 6 முதல் 8 நிமிடத்தில் களி நன்றாக வெந்துவிடும்.
6. கையில் தண்ணீர் தொட்டு களியைத் தொட்டுப் பார்த்தால் கையில் ஒட்டக்கூடாது.
7. அந்த நிலையில் களியை இறக்கி விடாலாம்.
8. கையில் ஒட்டினால் இன்னும் சிறிது நேரம் வேக வைத்து இறக்கவும்.
கருப்பட்டி பாகு செய்முறை:
1. கருப்பட்டியை சிறு சிறு துண்டாக உடைத்துக் கொள்ளவும்.
2. அதில் 1 டம்ளர் தண்ணீர் ஊற்றி காய்ச்சி வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
3. ஒரு பாத்திரத்தில் 1 தேக்கரண்டி மாவைப் போட்டுத் தண்ணீர் ஊற்றி நீர்ம நிலையில் கரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு பாத்திரத்தில் கருப்பட்டிப் பாகுவை ஊற்றிக் கொதிக்க வைத்து, அத்துடன் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றி அதில் மிளகுப் பொடி, சுக்குப் பொடி மற்றும் ஏலக்காய்ப் பொடி போட்டுக் கிண்டவும்.
5. கொதித்து வந்ததும் கருப்பட்டி பாகுவை இறக்கி விடவும்.
குறிப்பு:
* களியை எடுத்து வைத்து, அதன் நடுவில் கருப்பட்டி பாகுவை ஊற்றி, அதன் மேல் நல்லெண்ணெய் ஊற்றிச் சுடசுடச் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.