பூரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. கோதுமை மாவு – 150 கிராம்
2. மைதா மாவு – 150 கிராம்
3. ரவை – 1 தேக்கரண்டி
4. எண்ணெய் – தேவையான அளவு
5. உப்பு – தேவையான அளவு
செய்முறை :
ஒரு பாத்திரத்தில் தேவையான தண்ணீரில் 1 தேக்கரண்டி எண்ணெய், உப்பு சேர்த்து அதில் கோதுமை மாவு, மைதா மாவு, ரவை சேர்த்து கையில் ஒட்டாத பதத்தில் மாவாகப் பிசைந்து சிறு சிறு உருண்டையாக உருட்டி வைக்கவும்.
2. இந்தச் சிறு உருண்டைகளை சப்பாத்திப் பலகையில் இட்டு சிறிது எண்ணெய் ஊற்றி பூரி அளவிற்கு மெல்லியதாக அழுத்தி வைக்கவும்.
3. வாணலியில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அழுத்தி வைத்துள்ள பூரி மாவை ஒவ்வொன்றாகப் போட்டு எடுக்கவும். பூரியில் இருக்கும் எண்ணெய் இறங்கியதும் சூடாகப் பரிமாறலாம்.
குறிப்பு
1. பூரி மாவு பிசைந்து அதிக நேரம் வைத்திருந்து பொரித்தால் அதிக எண்ணெய் உறிஞ்சும்.
2. மாவு பிசையும் போது ரவைக்குப் பதிலாக 1 தேக்கரண்டி சர்க்கரை சேர்த்தாலும் பூரி மொருமொருப்பாக வரும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.