சேமியா கேசரி
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. சேமியா – 1/2 கிலோ
2. சீனி – 300 கிராம்
3. நெய் (அல்லது ) டால்டா – 100 கிராம்
4. முந்திரிப்பருப்பு – 20 எண்ணம்
5. கிஸ்மிஸ் பழம் - 15 எண்ணம்
6. ஏலக்காய் – 3 எண்ணம்
7. கேசரி பவுடர் – தேவையான அளவு
செய்முறை:
1. ஒரு வாணலியில் டால்டாவை ஊற்றி முந்திரிப் பருப்பைப் போட்டு வறுத்துக் கொள்ளவும்.
2. அதில் 400 மிலி தண்ணீரை ஊற்றிக் கொதிக்க விடவும்.
3. அதனுடன் கிஸ்மிஸ் பழம், பொடி செய்த ஏலக்காய்த் தூள், கேசரி பவுடர் போட்டுக் கலக்கவும்.
4. சேமியாவை சேர்த்து நன்கு கிளறி விடவும்.
5. சேமியா வெந்த பிறகு அதில், சீனியைச் சேர்த்துக் கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.