சர்க்கரை வள்ளிக்கிழங்கு பொரியல்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. சர்க்கரை வள்ளிக்கிழங்கு - 200 கிராம்
2. தேங்காய்த் துருவல் - 4 தேக்கரண்டி
3. மிளகாய் வற்றல் - 2 எண்ணம்
4. பெருங்காயம் - சிறிது
5. கடுகு - 1/2 தேக்கரண்டி
6. உளுந்து - 1/2 தேக்கரண்டி
7. உப்பு - தேவைக்யான அளவு
8. எண்ணெய் - தேவையான அளவு
9. கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
1. சர்க்கரை வள்ளிக் கிழங்கை நன்றாகக் கழுவி இட்லி தட்டில் ஐந்து நிமிடம் வேக வைத்து எடுத்து வைக்கவும்.
2. வேக வைத்த கிழங்கின் தோலை நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் மிளகாய் வற்றல், பெருங்காயம், கடுகு, உளுந்து, கறிவேப்பிலை போட்டுத் தாளிக்கவும்.
4. தாளிசத்துடன் வேகவைத்த கிழங்கைச் சேர்த்து, பின் அதனுடன் தேங்காய்த் துருவல், உப்பு சேர்த்து நன்கு கிளறி இறக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.