இனிப்புக் குழிப் பணியாரம்
கவிதா பால்பாண்டி
தேவையான பொருட்கள்:
1. இட்லி அரிசி- 300 கிராம்
2. உளுந்து- 75 கிராம்
3. வெந்தயம்- 1 மேசைக்கரண்டி
4. வெல்லம்- 200 கிராம்
5. உப்பு- தேவையானளவு
6. எண்ணெய்- தேவையானளவு.
செய்முறை:
1. அரிசியுடன் உளுத்தம்பருப்பு, வெந்தயம் ஆகியவற்றைச் சேர்த்து ஊற வைத்து நைசாக அரைத்து உப்பு சேர்த்து இரவு முழூவதும் புளிக்க வைக்கவும்.
2. மறுநாள் அதில் வெல்லத்தைக் கரைத்து வடிகட்டி மாவில் ஊற்றிக் கலக்கவும்.
3. தோசை மாவு பதத்தை விட சற்றுக் கெட்டியாகக் கரைத்து வைக்கவும்.
4. குழி பணியாரச் சட்டியை அடூப்பில் வைத்துக் காயவைத்து, ஒவ்வொரு குழியிலும் எண் ணெயை ஊற்றிச் சூடாக்கி அதில் கரைத்து வைத்துள்ள மாவை ஊற்றவும்.
5. ஒரு புறம் வெந்ததும் மறுபுறம் திருப்பி விட்டு வேகவிடவும்.சுற்றி எண்ணெய் விட்டு வெந்ததும் எடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.