இனிப்புக் குழிப்பணியாரம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. பச்சரிசி - 1/2 கப்
2. புழுங்கலரிசி - 1/2 கப்
3. உளுந்தம் பருப்பு -1/2 கப்
4. வெந்தயம் -1 தேக்கரண்டி
5. வெல்லம் - 1 கப் (துருவி வைக்கவும்)
6. சுக்கு - 1 துண்டு (பொடிக்கவும்)
7. ஏலக்காய் - 4 எண்ணம் (தட்டிக் கொள்ளவும்)
8. தேங்காய் - 1 துண்டு (சிறிய பற்களாக நறுக்கவும்)
9. முந்திரிப் பருப்பு - 10 எண்ணம்
10. எண்ணெய் - தேவையான அளவு
11. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சரிசி, புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு ஆகியவற்றை ஊற வைத்து இட்லி மாவுக்கு அரைப்பது போல் அரைத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும்.
2. மாவில் பொடித்த சுக்கு, தேங்காய்த் துருவல், முந்திரிப்பருப்பு, துருவிய வெல்லத்தூள் சேர்த்துக் கலந்து வைக்கவும்.
3. குழிப்பனியாரச் சட்டியில் எண்ணெய் சிறிது ஊற்றி, அதில் மாவைச் சிறு கரண்டியில் எடுத்து ஊற்றிச் சிறிது நேரம் கழித்து, அது வேகவும் திருப்பி விட்டு, இருபுறமும் வேகவைத்து எடுக்கவும்.
4. வேக வைத்த பனியாரத்தைச் சுக்கு, ஏலம் கலந்த வெல்லப்பாகுடன் சேர்த்துச் சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.