கார்த்திகை அப்பம்
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. அரிசிமாவு - 1 கப்
2. வெல்லப்பொடி - 3/4 கப்
3. வாழைப்பழம் (கனிந்தது) - 1 எண்ணம்
4. தேங்காய் துண்டுகள் (பொடியாக நறுக்கியது) - 2 மேசைக்கரண்டி
5. ஏலக்காய்த் தூள் - 1/2 தேக்கரண்டி
6. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. வெல்லப் பொடியுடன் அரை கப் தண்ணீர் சேர்த்துக் கரைத்து வடிகட்டிக் கொள்ளவும்.
2. வாழைப்பழத்தை நன்றாக மசித்துக் கொள்ளவும்.
3. அரிசிமாவு, மசித்த வாழைப்பழம், தேங்காய்த் துண்டுகள், ஏலக்காய்த்தூள் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து, அதில் வெல்லம் கரைத்த நீரை விட்டு இட்லி மாவுப் பதத்திற்குக் கரைத்துக் கொள்ளவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றிக் காய்ந்ததும், அதில் ஒரு மேசைக்கரண்டி மாவை எடுத்து ஊற்றவும். பொன்னிறமாக சிவக்கும் வரை பொரித்து எடுக்கவும்.
குறிப்புகள்:
1. அரிசி மாவிற்குப் பதில், மைதா அல்லது கோதுமை மாவிலும், ரவையிலும் கூட இந்த அப்பத்தைச் செய்யலாம்.
2. வெல்லத்திற்கு பதில் சர்க்கரையையும் பயன்படுத்தலாம்.
3. எண்ணெய்யில் பொரித்தெடுப்பதற்குப் பதில், குழிப்பணியாரச் சட்டியிலும் பணியாரம் செய்வதுபோல் சுட்டெடுக்கலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.