பச்சைப் பயறு மசாலா
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. பச்சை பயறு - 1 கப்
2. மல்லித்தூள் - 2 தேக்கரண்டி
3. மிளகுத்தூள் - 1 தேக்கரண்டி
4. மஞ்சள்தூள் - 1/4 தேக்கரண்டி
5. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
6. எண்ணை - 1 தேக்கரண்டி
7. கடுகு - 1 தேக்கரண்டி
8. உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
1. பச்சைப்பயறை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
2. ஊறவைத்த பச்சைப்பயறை நன்றாகக் கழுவி நீரை வடித்து, அந்தப்பயறுடன் அரை கப் தண்ணீர், சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து இறக்கவும்.
3. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், கடுகு போட்டு தாளித்து, அதில் பச்சை மிளகாயைக் கீறிப் போட்டு வதக்கவும்.
4. பின்னர் அதில் வேக வைத்த பயறை வேகவைத்த நீருடன் அப்படியே ஊற்றவும்.
5. அதில் மஞ்சள் தூள், மல்லித்தூள், மிளகுத்தூள், தேவையான உப்பு சேர்த்துக் கிளறி விடவும்.
6. பாத்திரத்தை மூடி போட்டு சில நிமிடங்கள் கழித்துக் கொதிக்க விட்டு இறக்கி வைக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.