முட்டைக்கோஸ் தூள் பக்கோடா
சுதா தாமோதரன்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
2. பெரிய வெங்காயம் - 2 எண்ணம்
3. மல்லித்தழை - ஒரு கைப்பிடியளவு
4. பூண்டு - 3 பல்
5. கடலை மாவு - 1 கப்
6. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
7. சோடா உப்பு - 1 சிட்டிகை
8. மிளகாய்த்தூள் - 1/2 தேக்கரண்டி
9. அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
10. உப்பு - தேவையான அளவு
11. எண்ணெய் - தேவையான அளவு.
செய்முறை:
1. முட்டைக்கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.
2. பூண்டைத் தட்டி வைத்துக் கொள்ளவும்.
3. கடலை மாவு, அரிசி மாவு, நறுக்கிய முட்டைக் கோஸ், வெங்காயம், பச்சை மிளகாய், மல்லித்தழை மற்றும் பூண்டு ஆகியவற்றைச் சேர்க்கவும்.
4. இந்தக் கலவையில் சோடா உப்பை விட்டுக் கிளறிக் கொள்ளவும்.
5. இரண்டு தேக்கரண்டி எண்ணெய்யினை எடுத்துக் காய வைத்துச் சூடான எண்ணெய்யைப் மாவில் ஊற்றிப் பக்கோடா மாவுப் பதத்திற்கேற்றபடி பிசைந்து கொள்ளவும்.
6. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுக் காய்ந்ததும், பக்கோடா மாவை உதிர்த்து விட்டு மொறுமொறுவெனப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.