தக்காளி சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. தக்காளி- 500 கிராம்
2. பல்லாரி வெங்காயம்- 250 கிராம்
3. வெண்ணெய் அல்லது நெய்- 50 கிராம்
4. பால்- 100 மி.லி
5. மைதா மாவு- 2 தேக்கரண்டி
6. வெங்காயம்- 100 கிராம்(நறுக்கியது)
7. உப்பு, மிளகுத்தூள்- தேவையான அளவு.
செய்முறை:
1.தக்காளியையும், வெங்காயத்தையும் நன்கு வேகவைத்து மிக்ஸியில் அரைத்து வடிகட்டி எடுக்கவும்.
2. வாணலியில் வெண்ணெய் விட்டு இளகியதும் நறுக்கிய வெங்காயத்தைப் பொன் வறுவலாக வதக்கி மைதாவையும் சேர்த்துக் கிளறவும்.
3. அதில் வடிகட்டி வைத்திருக்கும் தக்காளி, வெங்காயக் கலவையைச் சேர்த்துக் கொதிக்க விடவும்.
4. கொதித்த பின்பு மறுபடியும் வடிகட்டி உப்பு, மிளகு சேர்த்து சற்று ஆறிய பின்பு பரிமாறவும்.
குறிப்பு:சூப் அதிக சூடாக இருககும் போது பாலை ஊற்றினால் பால் திரிந்து விடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.