நண்டு சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. நண்டு - 1/2 கிலோ
2. வெண்ணெய் - 1 தேக்கரண்டி
3. எண்ணெய் - 1 தேக்கரண்டி
4. பச்சை மிளகாய் - 2 எண்ணம்
5. பூண்டு - 4 பல்
6. இஞ்சி - சிறு துண்டு
7. மிளகுத்தூள் - 1/4 தேக்கரண்டி
8. வெங்காயத் தாள் - 3 எண்ணம்
9. சோளமாவு (கார்ன்ஃப்ளார்) - 2 தேக்கரண்டி
10. பால் - 1/4 கப்.
செய்முறை:
1. இலேசான சுடுநீரில் மஞ்சள் கலந்து அதில் நண்டைப் போட்டுச் சிறிது நேரம் கழித்து சுத்தம் செய்து வைக்கவும்.
2. சுத்தம் செய்த நண்டை ஒரு பாத்திரத்தில் போட்டு வேக வைக்க வேண்டும்.
3. வேக வைத்த நண்டு ஆறிய பின்பு அதன் ஓட்டைப் பிரித்துச் சதைப் பகுதியை மட்டும் எடுத்து வைக்கவும்.
4. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டுப் பொடியாக வெட்டிய வெங்காயத்தாள், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி போன்றவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும்.
5. பாலில் சோளமாவைக் கரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
6. வதக்கியதில் 250 மிலி அளவு தண்ணீர் விட்டு உப்பு போட்டு நன்றாகக் கொதிக்க வைக்க வேண்டும்.
7. கொதிக்கும் பொழுது நண்டுச் சதையைப் போட்டு, சோளமாவு கலந்த பாலை ஊற்றிக் கொதி வந்தவுடன் இறக்கவும்.
8. இந்த சூப்பில் மேலாக மிளகுத்தூள் தூவி சாப்பிடலாம்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.