வெஜிடபுள் சூப்
சித்ரா பலவேசம்
தேவையான பொருட்கள்:
1. முட்டைக்கோஸ் - 200 கிராம்
2. பெரிய வெங்காயம் - 200 கிராம்
3. பச்சை பீன்ஸ் - 50 கிராம்
4. காரட் - 100 கிராம்
5. வெண்ணெய் - 50 கிராம்
6. பால் - 100 மி.லி
7. மைதா மாவு - 2 மேஜைக் கரண்டி
8. உப்பு - தேவையான அளவு
9. மிளகுத்தூள் - தேவையான அளவு.
செய்முறை:
1.வாணலியில் வெண்ணெய்யை விட்டுக் காய்ந்ததும் நறுக்கிய காய்கறிகள், வெங்காயம், மைதா போட்டு வதக்கவும்.
2. வதங்கிய பின்பு 1 லிட்டர் தண்ணீர் விட்டு காய்கறிகளை ஓரளவு வேகவிடவும்.
3. இதில் 100 மி.லி பால் கலந்து உப்பு, மிளகுத்தூள் சேர்த்து பரிமாறலாம்.
குறிப்பு:சூப் அதிக சூடாக இருககும் போது பாலை ஊற்றினால் பால் திரிந்து விடும்.
*****

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.